Nigazhvugal

Thursday
May 23rd
பக்ரீத்தில் பசுவை பலியிட வேண்டாம்: முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல் PDFPrintE-mail
Friday, 05 December 2008 20:23

இந்துக்களின் மத நம்பிக்கையை கருத்தில் கொண்டு இஸ்லாமியர்கள் யாரும் பக்ரித் தினத்தில் பசுவை பலியிட வேண்டாம் என்று டர் - உல்- உலூம் என்ற பிரபல முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு ஆல் இண்டியா ஆர்கனைசேஷன் ஆஃப் இமாஸ் ஆஃப் மாஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

அதில், பக்ரித் தினத்தில் பலியிட வேண்டும் என்பது மரபு. ஆனால். இந்துக்களின் மனதை புண்படுத்தாத வகையில், பசுவை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாறாக, பசுவுக்கு பதிலாக வேறு விலங்குகளை பலியிட ஷாரியா ஒப்புதல் தெரிவிக்கிறது என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் மும்பை தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பக்ரித் அன்று தங்களது தோள்பட்டையில் கருப்பு நிற ரிப்பன் அணியுமாறும் ஆல் இண்டியா ஆர்கனைசேஷன் ஆஃப் இமாஸ் ஆஃப் மாஸ்க் கெட்டுக்கொண்டுள்ளது.
 
கடந்த 1866 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டர்-உல்-உலூம் அமைப்பு இஸ்லாமை சொல்லித் தரும் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமாகும்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |