| இந்தி 'கஜினி'யை வெளியிட இடைக்கால தடை | ![]() | ![]() | ![]() |
| Tuesday, 23 December 2008 17:05 |
தமிழில் சூர்யா - அசின் நடித்து தற்போது இந்தியில் அதே தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ள அமீர்கான் - அசின் நடிக்கும் கஜினி படத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஏ.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவில், 'காப்புரிமை மற்றும் ரீமேக் உரிமை பிரச்சனையில் இந்தி 'கஜினி'க்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், 'தமிழில் 'கஜினி' படத்தை எடுக்கும் போது தயாரிப்புச் செலவு திட்டமிட்டதை விட அதிகமாகிவிட்டது. இதனால், இப்படத் தயாரிப்பு பங்குதார்களும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் பண உதவி புரிந்தனர். இதற்காக, அவர்களுக்கு தெலுங்கு உரிமையை வழங்கினேன். கஜினி படத் தயாரிப்பு நிறுவன பங்குதாரர்கள், முருகதாஸ் ஆகியோர் என்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். இந்தியில் ரீமேக் செய்யும் உரிமை என்னிடம் இருக்கும்போது, அமீர்கான் கஜினியை இந்தியில் ரீ-மேக் செய்து வந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றேன். எனவே, இந்தி கஜினி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,' என்று அவர் மனுவில் கூறியிருக்கிறார். இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ஆர்.சிவக்குமார், கஜினி படத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்தத் தடையை நீக்குவதற்கான முயற்சியில் இயக்குனர் முருகதாஸும், இந்தி கஜினி படக்குழுவும் தீவிரமாக இறங்கியுள்ளது. படம் வெளியாகும் இம்மாதம் 25-ம் தேதிக்கு முன்பே தடையை விலக்கிக் கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| Last Updated on Wednesday, 24 December 2008 01:20 |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |