Nigazhvugal

Thursday
May 23rd
கஜினி வீடியோ கேம் வருகிறதுPDFPrintE-mail
Friday, 02 January 2009 19:16

தமிழில் வெற்றி பெற்று இந்தியில் அவதாரம் எடுத்துள்ள கஜினி அடுத்ததாக சைபர் உலகில் விளையாட்டு வடிவத்தில் அவதாரம் எடுக்க இருக்கிறது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமீர்கான் நடித்த கஜினி திரைப்படம் வெளியான முதல் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டி சாதனை படைத்தது. இதில் ஏகத்திற்கு மகிழ்ச்சி அடைந்துள்ள படத்தின் தயாரிப்பாளருக்கு அடுத்ததாக மகிழ்ச்சி ஒன்று காத்திருக்கிறது.

கஜினி என்ற பெயரில் அமீர்கானை மையமாகக் கொண்ட கம்ப்யூட்டர் கேம் ஒன்று இந்த வாரத்தில் அறிமுகமாக இருக்கிறது. முதலில் இந்த கேம் கஜினி ரிலீசாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால் இந்த விளையாட்டை மேலும் செம்மைப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் நோக்கத்துடன் இதன் அறிமுகம் தாமதப்படுத்தப்பட்டதாக கஜினி படத்தின் தயாரிப்பாளர் மது மண்டேனா தெரிவித்தார்.

எப்எக்ஸ் லேப் தலைவர் சசி ரெட்டி மற்றும் கஜினி தயாரிப்பாளர் மது மண்டேனா ஆகியோர் இணைந்து 3 கோடி ரூபாய் செலவில் இந்த கஜினி விளையாட்டை உருவாக்கியுள்ளனர்.

கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்டுள்ள கஜினி வேடத்தில் காணப்படும் அமீர்கான் பொம்மை வில்லன்களை தேடிக்கண்டுபிடித்து அழிப்பது போனல் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஷார்ட் டர்ம் மெமரி லாஸ் பாதிப்புக்குள்ளான ஹீரோவை 15 நிமிடத்திற்குள் கண்டுபிடித்து அதன் பிறகு வில்லன்களை அழிக்க வேண்டும் என்பது போல் இந்த விளையாட்டு அமைந்துள்ளது.

இனி கம்ப்யூட்டர் வைத்திருக்கும் எல்லாரும் கஜினிதான் போங்கள்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |