Nigazhvugal

Saturday
May 18th
உயிரை பணயம் வைக்க மாட்டேன் - பிப்ஸ்PDFPrintE-mail
Sunday, 18 January 2009 18:29

உயிரைக் கொடுத்து நடிக்க வேண்டும் என்றே எல்லா நட்சத்திரங்களும் நினைப்பார்கள். ஆனால் பாலிவுட் கவர்ச்சி நடிகை பிபாஷா பாசு, நடிப்பிற்காக உயிரைப் பணயம் வைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

லாமா என்ற படத்தில் பிபாஷா பாசு நடித்து வந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது. ஆனால் திடீரென்று அவர் படப்பிடிப்பிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார்.

ஒரு படத்தில் நடிப்பதற்காக உயிரை பணயம் வைக்க முடியாது என்று பிபாஷா கூறியிருந்தார். ஆனால் தாம் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

நடிப்புதான் என்று வாழ்க்கை என்று பிபாஷா கூறியுள்ளார். ஆனால் நடிப்புக்கு அப்பாற்பட்டு தனக்கு என்று ஒரு வாழ்க்கை உள்ளது என்றும், அந்த வாழக்கையை தேவையின்றி எந்தப் படத்திற்காகவும் பணயம் வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லாமா படப்பிடிப்பு பதட்டம் நிறைந்த காஷ்மீரில் நடைபெறுவதால், தமக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள உறுதி அளித்ததாகவும், ஆனால் ஒரு வாரத்திற்கும் மேலாகியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் தாம் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் திரும்பிவிட்டதாக[வம் பிபாஷா கூறியுள்ளார்.

நான் ஏன் காஷ்மீரில் படப்பிடிப்பிலிருந்து வெளியே வந்தேன் என்று அவர்களுக்குத் தெரியும் என்கிறார்.

Last Updated on Sunday, 18 January 2009 18:49
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |