| ஈழத் தமிழர் பிரச்சனை : பொங்கிய சேரன் | ![]() | ![]() | ![]() |
| செய்திகள் - தமிழகம் |
| Sunday, 19 October 2008 21:12 |
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற தமிழ் திரையுலகினரின் பொதுக்கூட்டத்தில் இயக்குனர் சேரன் பேசியது: ஈழத் தமிழர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முக்கிய காரணம் நம் மக்கள்தான். முப்பது ஆண்டுகளுக்காக உள்ள பிரச்சனைக்கு நம் மக்கள் களத்தில் நேரடியாக இறங்காததே காரணம். இப்பிரச்சனையைப் பற்றி தெரிந்துகொண்டால் மட்டும் போதாது, நேரடியாக இறங்க வேண்டும். வெறும் கவர்ச்சியை ரசித்துவிட்டு, முடங்கிக் கிடக்கக் கூடாது. தேர்தல் காலத்தில் உதவும் என்பதால், ஈழப் பிரச்சனையை நீட்டிக்கொண்டே இருக்க வழிவகுக்கப்படுகிறது. நம் மக்கள் புரட்சி செய்ய தயரானால் மட்டுமே, நமது தமிழீழ மக்களுக்கு நல்ல தீர்வைக் கொடுக்க முடியும். நமது அரசியல்வாதிகளும், இந்திய அரசும் மனது வைத்தால் மட்டுமே தீர்வுக்கு சாத்தியம். தமிழனாக இல்லாத நடிகர் ஜீவாவுக்கு உள்ள தமிழுணர்வு கூட சிலருக்கு இல்லை. இந்த கூட்டத்துக்கு வராத நடிகர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம், என்றார் இயக்குனர் சேரன். இந்தப் பொதுக்கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, அமீர், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்பட தமிழ் திரையுலகைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டனர். |
| Last Updated on Monday, 20 October 2008 11:58 |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |