Nigazhvugal

Friday
May 24th
சென்னையில் வைகோ கைதுPDFPrintE-mail
செய்திகள் - தமிழகம்
Thursday, 23 October 2008 17:59
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரிவினையை து]ண்டும் வகையில் பேசியதாக அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களது பேச்சுக்கள் தேச ஒற்றுமைக்கு விரோதமானது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வைகோ மற்றும் கண்ணப்பன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட ஆயுதம் ஏந்தி போராடும் நிலை வந்தால் தாம் முதலில் ஆயுதம் ஏந்துவேன் என்று வைகோ பேசினார். தனி ஈழம் மட்டுமின்றி தனித் தமிழ்நாடும் உருவாகும் என்று கண்ணப்பன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated on Thursday, 23 October 2008 18:05
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |