Nigazhvugal

Thursday
May 23rd
கோணங்கள்
'வாடா'வை வரவேற்கலாமா? - முக்கியத் தரப்பினரின் பார்வைPDFPrintE-mail
பார்வை
Thursday, 06 August 2009 08:01

புதுடெல்லி: இந்திய விளையாட்டுத் துறையில் 'வாடா' விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதுபற்றிய பல தரப்பினரின் பார்வை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Read more...
 
'நகைச்சுவை இல்லாமல் சினிமா இல்லை'PDFPrintE-mail
பார்வை
Monday, 03 August 2009 07:43

கதாநாயகனாக வருவதைக் காட்டிலும் நகைச்சுவையாக நடிப்பதே கடினம் என்ற நடிகர் வடிவேலு, 'காமெடி இல்லாமல் சினிமா இல்லை," என்றார்.

Read more...
 
'ஆர்ட் ஃபிலிம்' என்ற முத்திரையின் பாதிப்பு!PDFPrintE-mail
பார்வை
Friday, 31 July 2009 08:42

'ஆர்ட் ஃபிலிம்' என்று குத்தப்படும் முத்திரையால், பல உன்னதமான சினிமா மக்களை சென்றடையாத அவல நிலை இருக்கிறது.

இப்படி கவலைக் கொண்டிருப்பவர், உலக அரங்கில் மதிக்கப்படும் இந்திய சினிமா படைப்பாளிகளுள் ஒருவரான அடூர் கோபால கிருஷ்ணன்!

Last Updated on Friday, 31 July 2009 08:46
Read more...
 
தலைவர்கள் பார்வையில் கர்மவீரர் காமராஜர்PDFPrintE-mail
பார்வை
Wednesday, 15 July 2009 11:49

தமிழகத்தின் முதலமைச்சராகவும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராகவும் இருந்து அருந்தொண்டாற்றியவர் கர்மவீரர் காமராஜர்.

இன்று அவர் 106வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது சேவைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் காமராஜர் பற்றி பல்வேறு தலைவர்கள் தெரிவித்த பாராட்டுக்கள் நிகழ்வுகள் வாசகர்களுக்காக இங்கே தரப்படுகிறது. 

"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன்.

- ஜவகர்லால் நேரு

“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?"

- தந்தை பெரியார்.

“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”

-இந்திரா காந்தி

"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."

- சுப்பிரமணிய அய்யர்

"காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"

- எம். ஜி. இராமச்சந்திரன்


"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."

-கலைஞர் கருணாநிதி

"காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது."

-முன்னாள் மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்

“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”

-காஞ்சி சங்கராச்சாரியார்

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 4 of 15
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |