மயிலாடுதுறை அருகே திருவேள்விகுடி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்ததை கண்டித்து விவசாயிகள் நெல்லினை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி செய்த பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்தில் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து கொள்முதல் நிலையம் கடலங்குடி கிராமத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பழைய இடத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் இன்று மயிலாடுதுறையிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லினை சாலையில் கொட்டி மறியல் செய்த விவசாயிகள் பழைய இடத்திலேயே கொள்முதல் நிலையத்தை அமைத்து தரக்கோரி முழக்கமிட்டனர்.
தகவலறிந்து வந்த குத்தாலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பழைய இடத்திலேயே நேரடி நெல் கொள்முதல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை விவசாயிகள் தற்காலிகமாக கைவிட்டனர்.
மேலும் அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் : கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: