மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து, இறந்தவர் உடலை அடக்கம் செய்யாமல், சடலத்துடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை தாலுகா மாப்படுகையில் முத்தப்பன் காவிரிக் கரையோரத்தில் சுடுகாடு உள்ளது. 100 ஆண்டுகளாக இந்த சுடுகாட்டில் இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கான கொட்டகை, மின்விளக்கு, சாலை வசதி, இறுதி சடங்கு செய்வதற்கு தண்ணீர் வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை.

இந்நிலையில், மாப்படுகை கிட்டப்பா நகரைச் சேர்ந்த பக்ரிசாமி என்பவர் உயிரிழந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் ராகவன், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தர்ணா போராட்டத்தை கைவிட்டு இறந்தவர் உடலை அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link