செங்கல்பட்டில் திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட கல்பாக்கம் அடுத்த நரசாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் ஆவார். இவரது மகள் நிஷாந்தி (வயது19) இவருக்கும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் (பெலாகவி) மாவட்டத்தைச் சேர்ந்த மக்புல் (வயது22) என்ற இளைஞருடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

நாளுக்குநாள் மக்புல் மீது காதல் அதிகரித்த நிலையில் முகநூலில் எத்தனை நாள் காதலிப்பது மக்புலை நேரில் பார்க்க வேண்டும் என நிஷாந்தினிக்கு தோன்றியுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனை சந்திப்பதற்காக கர்நாடகத்துக்கு சென்றுள்ளார். என்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க: பெண்கள் விவகாரத்தில் சிக்கிய தம்பி.. மதுபோதையில் அடித்துக்கொன்ற அண்ணன்

இந்நிலையில் இருவருக்கும் திருமணமாகி சில மாத காலம் கர்நாடகாவில் வசித்து வந்துள்ளனர் நிஷாந்தினி கர்நாடகாவில் போதிய வசதி கிடைக்காத காரணத்தால் தன் தந்தைக்கு செல்போன் மூலம் கண்ணீர் மல்க பேசினார். மகள் பேசியதைக் கேட்டு மனம் இரங்கிய தந்தை ராஜேந்திரன் தன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனிடையே கல்பாக்கம் வந்து காதல் ஜோடி சில மாதங்களாக நிஷாந்தினின் தந்தைக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.

இரு தினங்களுக்கு முன்பு நிசாந்தினியின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கல்பாக்கம் அணுசக்தி துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த மக்புல் பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் இருந்துள்ளார். நேற்று பணிக்கு வராததைக் கண்ட நண்பர்கள் மக்புல்லை காண வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்து புகைவந்ததைக் கண்டுள்ளனர். அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்ததில் உடம்பில் வெட்டுக்காயம் மற்றும் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

மேலும் படிக்க: ஊதாரித்தனமாக சுற்றி வந்ததை தட்டிக்கேட்ட மனைவி – ஊதாங்கோலால் அடித்துக்கொன்ற கணவன்

இதனிடையே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த திருக்கழுக்குன்றம் காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை மற்றும் தடயங்களை சேகரிக்கும் நிபுணர்களை வைத்து மரணத்திற்கான காரணங்களை தேடிவந்தனர்.

காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் காவல்துறை தரப்பில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link