அரியலூர் பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக வருபவர் லெட்சுமி பிரியா. நேற்று மாலை செந்துறை ரவுண்டானா அருகில் இருந்த லெட்சுமிபிரியா மயங்கி விழுந்தார். இந்நிலையில் விசாரணையின் போது செடி கருகி போகச் செய்யும் பூச்சி மருந்தை குடித்ததாக கூறிய லெட்சுமி பிரியா சுயநினைவை இழந்த நிலையில் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமானதையடுத்து உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அவர் உடல்நிலை அபாய நிலையில் உள்ளதால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர் லெட்சுமி பிரியா திருச்சியில் ஐஜி அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்.

பணி தொடர்பாக ஏதாவது பிரச்சனை இருந்துள்ளதா இல்லை உயர் அதிகாரிகள் கொடுத்த தொல்லையினால் தற்கொலைக்கு முயன்றாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பெண் காவல் உதவி ஆய்வாளர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெண் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: கலைவாணன் (அரியலூர்)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link