உலகமயமாக்கல் எனும் சக்கரத்தின் கீழ் சிக்குண்ட விஷயங்களில் பறவை இனமும் ஒன்று. டி.டி.டி எனும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டினால் பறவைகள் அழிந்து போகின்றன என்று சொல்லிய ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’ தொடங்கி, ‘டைக்லோஃபினாக்’ எனும் கால்நடைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் மூலம் வல்லூறுகள் இறந்து போகின்றன.

அந்த வரிசையில் ‘மொபைல் பொன் டவர்’களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் மூலம் சிட்டுக்குருவிகள் அதிகமாக அழிந்து வருகின்றன என்று ஒரு செய்தி இன்று மக்களுடையே அதிகம் விவாதிக்கப்படுகிறது. அது எந்த அளவு உண்மை என்பது தெரியாத நிலையில் இன்று நாடு முழுவதும் ‘உலக சிட்டுக்குருவிகள் தினம்’ அனுசரிக்கப்பட உள்ளது.

சிட்டுக்குருவி என்ற இந்த ஒரு பறவை மட்டும்தான் மனிதர்களிடம் இணக்கமாக இருக்கக் கூடியது. எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ அந்த சுற்றுப்புறங்களில் குருவிகள் காணப்படுகின்றன. சுமார் 10,000 வருடங்களாக இந்தப் பறவை இனம் இருந்து வருகிறது. சரியான உணவு கிடைக்காதது,

முட்டையிடுவதற்கான தகவமைப்பு உள்ள இடம் கிடைக்காதது, மொபைல் போன் டவர்களில் இருந்து வரும் நுண்ணிய கதிரியக்கம் போன்ற பல காரணங்களால் குருவிகள் அழிந்து வருகின்றன. உணவு சேகரிப்பதைக் கூட சிட்டுக்குருவிகள் சமாளித்துவிடக் கூடும். ஆனால் அவற்றின் இனப்பெருக்கம் தான் கேள்விக்குறி! குருவிகள் முட்டையிடுவதற்கான தகுந்த தகவமைப்பு உள்ள கூடுகளை இன்று எந்த வீடுகளிலும் நீங்கள் பார்த்துவிட முடியாது.

இதையும் படியுங்கள் : அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவி இனத்தை மீட்க பள்ளி மாணவர்களின் அபார முயற்சி

அதற்கான முக்கியக் காரணம் மாறிவரும் கட்டிட வடிவமைப்புகள். மேலும் வயல்களில் கம்பு, சோளம், கேள்வரகு என சிறுதானிய வகைகளை பயிரிடும் விவசாய நிலங்கள் கூட குறைந்து வருவது ஒரு காரணம்.வெளிநாட்டு காதல் பறவைகள் என்ற போர்வையில் பல வண்ண குருவி இனங்களை நாம் வீட்டில் அலங்கரித்து வளர்க்கிறோம்.

ஆனால் நம்முடனே வாழ்ந்துவந்த சிட்டுக்குருவிகள் வாழ எந்த வழிவகைகளையும் நாம் மறந்துவிட்டோம். பூச்சிக்கொல்லிகள், மொபைல் டவர்கள் போன்ற பல காரணங்கள் குருவிகள் அழியக் காரணமாக இருக்கின்றன. சமீபத்தில், ‘அன்லெட்டட் பெட்ரோல்’ மூலம் வெளிப்படும் கசடுகளால் பூமியில் உள்ள புழுக்கள் அழிந்து வருகின்றன.

குருவிகளுக்கான முக்கிய உணவுப் புழுக்கள், அவை இல்லாமல் போவதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன. தவிர, அவை முட்டையிடுவதற்கான கூடுகளை அமைக்கத்தகுந்த இடங்கள் இல்லாததால் இனப்பெருக்கமும் தடைபட்டுப் போகின்றன.

கிராமங்கள் நகரங்களை நோக்கி பயனித்தாலும், நாகரீகம் என்ற பெயரில் மண் வீடுகளையும், திண்ணைகளையும், கூரை வீடுகளையும் ஏன் ஓட்டு வீடுகளையும் கூட நாம் இழந்து கான்கரீட் வீடுகளாக அதுவும் சதுர கணக்கில் ஒரு சதுர இடத்தையும் விட்டுவைக்காமல் வீடுகட்டி அதில் வாழத் தொடங்கினோமோ அன்றே நம்முடன் வந்த உறவுகள், பறவைகள் குறிப்பாக சிட்டுக்குருவிகள் உள்ளிட்டவைகளை இழந்து வருகிறோம்.

இதையும் படியுங்கள் : குற்றாலத்தில் குறைந்தது நீர்வரத்து… ஏமாற்றத்தோடு திரும்பும் சுற்றுலா பயணிகள்

இயற்கையை மறந்து வாழும் நம்மில் ஏது இன்பம். இதற்கு மத்தியில் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு காட்டுப்பகுதிகளில் அதிகளவில் ஆயிரகணக்கான சிட்டுக்குருவிகள் இன்றும் வாழ்ந்து வருகின்றன. இந்த சிட்டுக்குருவிகளின் வாழ்விற்கு அப்பகுதி மக்கள் எந்த வித இடையூறும் செய்யாமல் இருக்கிறார்கள் என்பது இந்த சிட்டுக்குருவிகள் தினத்தில் சற்று ஆறுதல்.

செய்தியாளர் : ஆர்.சுகுமாா், தருமபுரி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link