தருமபுரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடைபெற்றதாக பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மொத்தம் 1725 பேர் நகைக்கடன் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி 404 பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவு நிர்வாகம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பெயர் நகை கடன் தள்ளுபடி பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

இதனிடையே அரசு அறிவித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களுக்கு மட்டும் தற்போது தள்ளுபடி செய்வதாகவும், மீதம் உள்ள நபர்களுக்கு குறிப்பாக 5 பவுனுக்கு மேல் கடன் பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய விண்ணப்பம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக தெரிவித்த வாடிக்கையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை – அரூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் காவல் வாகனத்தில் அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : ஆர்.சுகுமாா், தருமபுரி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link