ஓசூரில் முதன்முறையாக மரபுச் சந்தை விற்பனை தொடங்கியுள்ளது. வாரம் தோறும் நடைபெறும் எனவும் இயற்கை விவசாயத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை உணவுப் பொருட்கள் பலவற்றை தற்போதைய தலைமுறைகள் மறக்க தொடங்கிய நிலையில், மீண்டும் நினைவூட்ட ஓசூரில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் காலை 6 முதல் மதியம் 1 மணிவரை மரபுச் சந்தை விற்பனை நிலையம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அரிசி, திணை, சத்து பானம், தேன், பலகாரம், விதைகள், தானியங்கள், அழகுப் பொருட்கள், மாவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள், ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், தீப விளக்கு, ஊறுகாய், கஞ்சி என ஆரோக்கியத்தை காத்த பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் தமிழ்க் கலை இலக்கிய பட்டறை ஏற்பாடு செய்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்கப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று ஓசூரில் நடைபெற்றது. முன்னாள் நகர மன்றத் தலைவரும் தற்போதைய மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான எம் மாதேஸ்வரன் இந்த மரபுச் சந்தையை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். பாரம்பரியமிக்க உணவுப் பழக்கங்களை படிப்படியாக நாம் மீண்டும் பழகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதன் மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், விவசாயிகளுக்கு லாபம் கொடுக்கவும் இந்த சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் இதற்கு ஆதரவு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று தொடங்கிய இந்த சந்தை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய சந்தை ஏற்பாட்டாளர் திருவள்ளுவன், ‘முற்றிலும் இயற்கை சார்ந்த சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெயில் செய்யப்பட்ட உணவு பண்டங்கள், பாரம்பரிய உணவு வகைகள் தயாரிக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். மேலும் ஓசூர் பகுதி தாய்மார்களிடையே இந்த மரபு சந்தை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மனித ரத்தத்தில் அதிகரிக்கும் பிளாஸ்டிக்… நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

இதுகுறித்து பேசிய பொதுமக்கள், ‘முற்றிலும் இயற்கை மூலம் தயாரிக்கக்கூடிய அனைத்து வகையான பொருட்கள் இங்கு கிடைப்பதாகவும் உடல் ஆரோக்கியத்தை வளர்க்க கூடிய அனைத்துவித இயற்கை சார்ந்த பொருட்களை வாங்கவும் இந்த மரபு சந்தை பயனுள்ளதாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த மரபு சந்தை திறப்பு விழாவில் மரபு சந்தை ஏற்பாட்டாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் பாரம்பரிய சிறுதானிய விற்பனையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்: செல்வா, ஓசூர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link