கிருஷ்ணகிரி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் இஸ்லாமிய மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்கக்கூடாது என கூறிய ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கொரலநந்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 342 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் 256 மாணவ மாணவிகள் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆக உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இஸ்லாமிய சமூக மக்கள் கொண்டாடும் ரமலான் பண்டிகை நோன்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருவதால் இஸ்லாமிய மாணவர்கள் சிலர் பள்ளிக்குச் செல்லும்போது நோன்பில் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் சங்கர் ஆகிய இரு ஆசிரியர்களும் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது ரமலான் நோன்பின் பங்கேற்றதால் அவர்களின் ஆற்றல் சோர்வு அடைய நேரிடும் என்றும் நோன்பு இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமார் உடற்பயிற்சியின் போது நோன்பு இருந்தால் மாணவர்கள் பங்கேற்க முடியாது மயக்கம் அடைவார்கள் என நோன்பு இருக்க கூடாது என கட்டாயப்படுத்தி மதரீதியாக இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்களின் இந்த செயலைக் கண்டித்து இன்று இஸ்லாமிய மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அரசு உயர்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் சமுதாயத்தின் வழிபாடுகளை ஆசிரியர்கள் இழிவுபடுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களை கண்டித்து பேசிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடற்கல்வி ஆசிரியர் இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இது குறித்து புகார் வந்ததை அடுத்து மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி மாணவர்களை கண்டித்த ஆசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் சங்கர் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்… கொள்ளையனை பொறிவைத்து பிடித்த மக்கள் – கண்டு கொள்ளாத போலீஸ்.. திருடனை விடிய விடிய காவல் காத்த ஊர்மக்கள்..
மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணையின் அறிக்கை வந்தவுடன் அவர்கள் மீது குற்றம் இருந்தால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்யேகமாக தகவல் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது ஹிஜாப் பிரச்சினை நிலவும் சூழலில் ரமலான் நோன்பில் மாணவர்கள் பங்கேற்க கூடாது என ஆசிரியர்கள் கட்டாயப்படுத்திய சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-செய்தியாளர்: குமரேசன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: