கிருஷ்ணகிரியில் சசிகலாவிற்கு ஆதரவாக மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டதால் அதிமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், பெங்களூர் சாலை, சேலம் சாலை, பழைய சப்ஜெயில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர்களில் இந்த தீர்ப்பு தற்காலிகமானதுதான். மோடியா லேடியா என்று கேட்டு மத்திய அரசை எதிர்த்து நின்று ஜெயலலிதாவின் பாதையில் இருந்து மாறி மத்திய அரசு சமரசம் செய்து சட்டத்தை வில்லாக வளைத்து நீதிமன்றத்திலும் சில தற்காலிக வெற்றிகளை பெற்றுள்ளனர். மக்கள் மன்றத்தில் நிச்சயம் தோல்வியை சந்திப்பார்கள் எனவும், 38 ஆண்டுகளாக அதிமுகவிற்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் உறுதுணையாக இருந்த சசிகலா ஜெயலலிதாவின் வழியில் மக்கள் மனதை வெல்வார் என வெற்றிவேல் என்பவரின் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… ஈவிகேஎஸ் இளங்கோவன் | அந்தமானில் ஆளுநர் பொறுப்பு வாங்க அண்ணாமலை துடிக்கிறார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் சொந்த ஊரிலேயே இந்த போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதால் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-செய்தியாளர்: குமரேசன்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link