டாக்டர் அம்பேத்கர் 131 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக துணைவேந்தரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி முனுசாமி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி சினிமாத்துறை வாயிலாகதான் மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஆகியோர் மக்களிடம் தமிழ் பற்றுக் கொள்கைகள் குறித்து எடுத்துரைத்து வளர்த்தனர். அந்த வகையில் தான் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு இந்தி தெரியாது என்று சொல்லாமல் நீங்கள் வேண்டுமென்றால் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அந்த வசனத்தை ஆதரித்து இந்தித் திணிப்புக்கு எதிராக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார்.

அவருடைய கருத்தில் தவறு ஒன்றும் இல்லை. ஏ.ஆர் ரகுமான் தமிழ் பற்றாளர் தனது தாய் மொழிக்கு மரியாதை கிடைக்கும் போது வரவேற்பதில் தவறில்லை. தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் 70% பேர் தமிழை கொண்டவர்கள். ஏ.ஆர்.ரகுமான் திரைப்படத் துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருது பெறும்போது எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசினார். அவரை அவரது குடும்பத்தின் பெயர்களை தமிழில் மாற்றுங்கள் என்று கூறுவது தவறு. தனது தாய் மொழியை உயர்த்திப் பேசுவது என்பது மொழிப் பற்றாளர்களின் இயற்கையான விஷயம். அதில் வேறு விதமான சிந்தனைகளோடு கருத்துகளை சொல்வது நல்லதல்ல.

திமுகவுக்கும், ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. திமுகவின் கோரிக்கைகளை ஆளுநர் நிறைவேற்றாமல் உள்ளதால் வருத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதனால் விருந்திற்கு கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என பதில் அளித்துள்ளார்.

மேலும் இந்திய துணைக் கூட்டத்தில் ஒரு சில தலைவர்கள் ஜாதி மத மொழி கடந்து போற்றக்கூடிய தலைவர்கள் உள்ளனர். அம்பேத்கருக்கு தமிழக அரசு புகழ் சேர்க்கும் வகையில் சமத்துவ நாள் என்று அறிவித்து இருப்பது மகிழ்ச்சி என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம், நாகராஜ், உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் : ஆ.குமரேசன்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link