போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த தூத்துக்குடியை சேர்ந்த 62 வயது கராத்தே பயிற்சியாளர் இமானுவேல் தன்னுடன் 6 வயது கராத்தே மாணவர்களுடன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் குரங்கு ஓட்டம்(குரங்கு ஓட்டம்) ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இன்றைய இளைய சமுதாயம் போதை வஸ்துக்களில் சிக்கி தவித்து வரும் சூழ்நிலையில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தூத்துக்குடியை சேர்ந்த 62 வயது கராத்தே பயிற்சியாளர் இமானுவேல் தன்னிடம் கராத்தே பயந்து வரும் 6 வயது மூன்று மாணவர்களுடன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் MONKEY ஓட்டம் ஓடியது.

அப்போது கராத்தே மாணவர்கள் அனைவரும் இவர்களை பின்தொடர்ந்து போதை ஒழிப்பு குறித்த வாசகங்களை கோஷங்களாக எழுப்பியவாறு போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தபடி வந்தனர்.

தூத்துக்குடி மூன்றாவது மயிலில் இருந்து தொடங்கிய இந்த குரங்கு ஓட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மங்கி ஓட்டத்தின் முடிவில் அனைவரும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

செய்தியாளர் : பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link