நாட்டின் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவிப்பது வழக்கம்.

இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் ஒரு விற்பனையாளர், 2 மேற்பார்வையாளர், மாவட்ட மேலாளர் என 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியது. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மீம்ஸ் பதிவுகள் வைரலாகி வருகிறது. மேலும் சமூக வலைதள பதிவுகளால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)

சமூக வலைதளங்களில் கலாய்க்கப்படும் மீம்ஸ்

மேலும் வடிவேல் பாணியில் டாஸ்மாக்கில் சிறப்பாக சரக்கு விற்ற குடியரசு தினத்தின் சிறப்பு விருது. விக்கிரவனுக்கு மட்டும் தானா? அதிகமா குடிக்கிற எங்களுக்கு எப்ப விருது கொடுப்பீங்க! நையாண்டியுடன் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்: கார்த்திகேயன் – செய்தியாளர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link