கரூர் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா பள்ளப்பட்டி ஹபிப் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது சுல்தான் – குர்ஷிதா பானு தம்பதியினரின் மகன் முகமது அக்கிஸ் (16). இவர் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயந்து வந்தார்.
இவர் நேற்று மாலை பொன்னாகவுண்டனூர் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி அருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இவர்கள் விளையாடிய பந்து அருகில் உள்ள ஒரு புதருக்கு சென்றது. அந்த பந்தை எடுக்கச் சென்ற முகமது அக்கிஸை பாம்பு கடித்துள்ளது. பாம்பு கடித்த உடன் சிறுவன் நேரடியாக தனது தாயாரிடம் சென்று பாம்பு கடித்தது குறித்து தெரிவித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் உடனடியாக அவரை பள்ளபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறியுள்ளனர்.
இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.