சிதம்பரத்தில் தாலிகட்டும் நேரத்தில் மணமகன் மண்டபத்தில் இருந்து தப்பியோடியதால் மணமகளின் உறவினர் ஒருவர் திடீரென மாப்பிள்ளையாக உருவெடுத்தார்.

கடலூர் மாவட்டம் உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் கடலூரில் நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் வரகூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.நேற்று முன் தினம் மாப்பிள்ளை அழைப்பு முடிந்த நிலையில், நேற்று திருமண மண்டபத்தில் கல்யாண வேளைகளில் படுஜோராக நடந்து கொண்டிருந்தது. திருமணத்திற்கு சில நிமிடங்களே உள்ள நிலையில், திடீரென மாப்பிள்ளையை காணவில்லை என்ற குரல் எழும்பியது.

சினிமா பாணியில் மாப்பிள்ளையை காணவில்லை என அங்கும் இங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் அவர் மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தது உறுதி செய்யப்பட்டது. மணமகனை தொடர்பு கொண்டும் பிடிக்க முடியவில்லை. இதனால் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாக, மணமகளின் பெற்றோர் மாற்று மணமகனை தேட முயற்சித்துள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(கடலூர்)

இந்த நிலையில், மணமகளின் தூரத்து உறவினரான ஒருவரிடம் தங்கள் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என பெற்றோர் கேட்டுள்ளனர். அந்த நபரும், மணமகளும் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டவே தூரத்து உறவினர் திடீர் மாப்பிள்ளையானார். தொடர்ந்து இருவருக்கும் அதே மேடையிலேயே திருமணம் நடைபெற்றது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓட்டம் பிடித்த மணமகன் ஏன் கடைசி நேரத்தில் தப்பி சென்றார் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:





Source link