வடலூரில் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூச திருநாளை முன்னிட்டு 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் நிறைவு பெற்றது.

இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு உணர்த்திய ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். மனிதனின் அகத்தில் உள்ள காமம், கோபம், லோகம், மோகம், மதம், மாச்சரியம் உள்ளிட்ட 7 வகை தீய குணங்களும் விலகினால் அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவனை காணலாம் என்பதே வள்ளலாரின் உபதேசம். இதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் சத்திய ஞான சபையின் மையப் பகுதியில் நிலைக் கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை மறைத்து 7 வண்ணத் திரைகள் போடப்பட்டுள்ளன.

மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகள் மட்டும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆனால் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும் கொடியேற்றம் அந்த வகையில் 152வது ஆண்டு தைப்பூச விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து, ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உங்கள் நகரத்திலிருந்து(கடலூர்)

இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் காலை 6 மணிக்கு காட்சியளிக்கிறது. அதன் பின்னர் காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணிக்கு காட்சி நிலையில் அதிகாலை 5.30 மணிக்கு என்று மொத்தம் 6 மணி நேரம் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

முன்னதாக ஜோதி தரிசனத்தை காண்பதற்காக சத்திய ஞான சபையின் இடது பக்கமும், முன்பகுதியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஜோதி தரிசன அறை கதவுகளுக்கும், சபையின் அருகில் உள்ள சிற்சபை மற்றும் பொற்சபை மண்டபங்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது. சரியாக 6 மணிக்கு சத்திய ஞான சபையின் மையப் பகுதி நிலைக் கண்ணாடியின் முன்புள்ள 7 வண்ணத் திரைகளை ஒன்றன்பின் ஒன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காட்டுகிறது.

அப்போது அங்கு திரண்டு நின்ற பக்தர்கள் வரிசையில் சென்று அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற அகவலை பக்தி பரவசத்துடன் கூறியபடி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7.10 மணி என 6 காலங்களில் ஜோதி தரிசனம் காட்டுகிறது.

இதை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். அதேபோன்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் தரிசனம் செய்தனர்.

இதே போல் பிரபல டிரம்ஸ் சிவமணி வருகை தந்து ஜோதி தரிசனம் பொழுது டிரம்ஸ் வாசித்தபடியே வழிபாடு செய்தார்

காலை 11 மணிக்கு தரும சாலை பிரசங்க மேடையில் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் சத்திய ஞான சபை மேடையில் வில்லிசை, வரலாற்று நாடகங்கள் மற்றும் நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜோதி தரிசனத்தை காண்பதற்காக வடலூரில் நேற்று லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் போலீசார், 900க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 10 இடங்களில் உயர்கோபுர மேடை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link