கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த சித்திரை திரு மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவரது மகள் சுகப்பிரியா வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சுகப்பிரியாவின் திருமணம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் நடைபெற்று முடிந்த அன்று மணமகன் வீட்டிற்கு சுகப்பிரியா புறப்பட்டபோது, ​​வீட்டில் அவர் வளர்த்த நாய் இடைவிடாமல் குரைக்க தொடங்கியது. சுகப்பிரியாவை விடாமல் முன் கால்களால் பற்றி கொண்டு அங்குமிங்கும் ஓடியது. நீண்ட நேரம் வளர்ப்பு நாயின் பாசப் போராட்டத்தை பார்த்து திருமணத்துக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

வளர்ப்பு நாயை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் கனத்த இதயத்துடன் சுகப்பிரியா சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

செய்தியாளர் : சரவணன் ஐயப்பன் (நாகர்கோவில்)

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: நாய், நாகர்கோவில், வைரல், வைரல் செய்திகள், வைரல் வீடியோ, வைரல் வீடியோக்கள்Source link