கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் குடியரசுக் கல்லூரியில் நடைபெறும் தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக இன்று உடற்கல்வி ஆசிரியருடன் வந்துள்ளனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவிகள் பின்னர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆற்றில் குளிப்பதற்காக காவிரியில் இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா உள்ளிட்ட 4 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)
இதுகுறித்து தகவலறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு 4 மாணவிகளின் உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் கூறியதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைமை ஆசிரியர் பொட்டுமணி விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் இப்ராஹிம் மற்றும் திலகவதி ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: