கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சிவாலய ஓட்டத்தை காண பக்தர்கள் குவிந்தனர்.

மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. சிவராத்திரி தினமான இன்று இரண்டாவது நாளாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து, கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் உள்ளிட்ட 12 சிவஸ்தலங்களைத் தொடர்ந்து ஓடிச்ச

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இந்த 12 சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம்’ என தெரியவந்துள்ளது. இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள். ஹரியும் சிவனும் ஒண்ணு என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படும் பக்தர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்த 12 சிவாலயங்களில் மகாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை விரதம் இருப்பார்கள், சிவராத்திரிக்கு நேற்றிரவு எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்.

சிவராத்திரியை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை திருமலை கோவிலில் இருந்து தொடங்கிய சிவாலய ஓட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் நாளை காலை வரை இந்த 12 கோவில்களில் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

இந்த நிலையில் தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சிவாலய தரிசனத்தில் பங்கேற்பதால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு சுமார் 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link