குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாணிக்கம் (26). இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைலில் வேலை பார்த்து வருகிறார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று வந்துள்ளார்.நேற்று இரவு இரண்டு சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்காக காத்திருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
நெஞ்சு வலிப்பதாக அருகில் இருந்த நண்பர்களிடம் கூறியதையடுத்து அவர்கள் வாகனத்தின் மூலம் அருகில் உள்ள அய்யர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)
இதையடுத்து அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது.கபடி போட்டியில் பங்கேற்று விளையாட வந்த இடத்தில் 26 வயதான இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாரப்படைப்பால் உயிரிழந்த கபடி வீரர் மாணிக்கத்தின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கபடி வீரர் மாணிக்கத்தின் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்: கார்த்திகேயன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: