கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டிற்குள் கணவன் மனைவி சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மீனச்சல் பகுதியை சேர்ந்த சோமு (45) கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி, இரு மகன்கள் மற்றும் தாயார் சரோஜினி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சோமு தனது தாய் சரோஜினியும் சேர்ந்து தாங்கள் வசித்து வரும் கான்கிரீட் வீட்டின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தெரியாமல் அருகில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு 12 லட்சம் ரூபாய் விற்பனை செய்துள்ளார். இந்த விஷயம் சில தினங்களுக்கு பிறகு சோமுவின் மனைவி பெனிலா தெரிய வரவே களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் சோமு மற்றும் வீட்டை வாங்கிய மணிகண்டன் இருவரையும் களியக்காவிளை காவல் நிலையத்திற்கு வரவழைத்து மனைவிக்கு தெரியாமல் வீட்டை வாங்கியதால் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு ஒப்ப கொண்ட மணிகண்டன் பணம் திரும்பி சில நாட்களுக்கு கால அவகாசம் வழங்கி காவல்நிலையத்தில் எழுத்துபூர்வமாக சோமுவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் சோமு தலைமறைவாகியுள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இந்த நிலையில், வீட்டை வாங்கிய மணிகண்டன் சோமுவின் தாயாரின் உதவியுடன் பெனிலா மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் வீட்டில் குடியேறியுள்ளனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை தடுத்து நிறுத்தி பெனிலாவுக்கு தகவல் பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெனிலா வீட்டை விற்பனை செய்த விவரம் தங்களுக்கு தெரியாது என கூறியுள்ளார்.

இதற்கிடையே மணிகண்டன், அவரது மனைவி மீனா மற்றும் சோமுவின் தாயார் சரோஜினி மூவரும் சோமுவின் வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் கதவை உடைத்து மூவரையும் பத்திரமாக மாற்றினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சோமுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link