திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லம்புதூரில் பட்டத்தரசி அம்மன் மகா சிவராத்திரி விழா வருடம் தோறும் கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு வடுகபட்டி, சிலமலை கோவில், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து சந்தனகருப்பு கோவிலில் வைத்து பூஜை செய்து ஊர்வலமாக பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு உள்ள கோவிலில் பூஜை செய்வதற்காக நேர்த்திக்கடன் வைத்தனர். பின்னர், பன்றி குட்டிகளை அழைத்து வந்து அந்த கால்கள் தரையில் படாதவாறு பாதைகளில் சேலைகளை விரித்து அதன் மீது பன்றிகளை நடக்க வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இறுதியாக கோவிலில் விருக பூஜை செய்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:
குறிச்சொற்கள்: திண்டுக்கல், உள்ளூர் செய்திகள், கோவில்