மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின்பு நாடு முழுவதும் அதற்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
நேற்று காலை விருதுநகர் ஆத்துபாலம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தங்களின் வாகனங்களை சாலையில் நிறுத்தி புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.
ஏய் எப்புட்றா? சேவல் முதல் கிளி வரை.. பல குரலில் கலக்கும் சாத்தூர் பள்ளிச் சிறுவன்…
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
மேலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் சிறு சிறு தவறுகளுக்கு கூட அதிக அளவு அபராதம் விதிக்கப்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: