விருதுநகரை சேர்ந்த இளைஞர் கபில்ராஜ், எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் மிமிக்கிரி செய்வது போல இசைக்கருவிகள் ஏதும் இன்றி தனது குரலிலேயே இசையை உருவாக்கி வருகிறார். இது மிமிக்கிரி இல்லை என்பவர் இது குரல் தாளம் என்கிறார்.
அதாவது இசைக்கருவிகள் ஏதும் இன்றி குரலிலேயே இசையை உருவாக்குவது தான் குரல் தாளம் என்ற விளக்கம் கொடுத்து அந்த கால இளையராஜா முதல் தற்போதைய அனிருத் வரை அனைவரது பாடலையும் இசைக்கருவிகள் இன்றி தனது குரலிலேயே இசையை உருவாக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து பேசிய கபில்ராஜ், “பள்ளியில் படிக்கும்போது விளையாட்டு தனமாக பின்வரிசையில் இருந்து வித்தியாசமாக சத்தம் எழுப்பி வந்தேன். அப்போது, ஒருநாள் ஆசிரியர் இங்க ஏன் சத்தம் போடுற? எல்லோர் முன்னாடியும் சத்தம் போடுனு எழுப்பி விட்டார். அது எல்லோருக்கும் பிடித்து போகவே பின்னர் அதை அப்படியே முயற்சி செய்து இசை எழுப்ப கற்று கொண்டேன். என்னை போன்ற கலைஞர்களை ஊக்குவித்து இனி வரும் காலத்தில் பாடலுக்கு இசைக்கருவிகள் ஏதும் இன்றி ஓர் இசையை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்றார்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.