திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் அகஸ்தியபுரம் அருகே காரைக்குடியை சேர்ந்தவர் தனபால். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அந்த நிலத்தை ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா ஆகியோருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் விற்றுள்ளார்.

சித்தரவு அருகே உள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா சின்னத்திரை நடிகர் ஆவார். ராஜகண்ணு மற்றும் கருப்பையா இருவரும் உறவினர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனபாலின் 5 ஏக்கர் இடத்தை சில தினங்களுக்கு முன்பு நில அளவர்களை வைத்து அளவு செய்யும் போது நாலரை ஏக்கர் நிலமே உள்ளது. அரை ஏக்கர் நிலம் இல்லாததை அறிந்த கருப்பையா தன்னை தனபால் ஐந்து ஏக்கர் எனச் சொல்லி ஏமாற்றிவிட்டதாகக் கூறி கோபமடைந்துள்ளார்.

தொடர்ந்து அந்த அரை ஏக்கர் நிலத்திற்கு பணம் பெறுவதற்கு தனபால் தோட்ட வீட்டிற்கு கருப்பையாவும் ராஜகண்ணும் சென்றுள்ளனர். அங்கு மூவருக்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது தனபால் வீட்டிற்குள் சென்று துப்பாக்கி எடுத்து கருப்பையாவை இடுப்பு மற்றும் காலில் சுட்டுள்ளார். அவர் சுடும்போது ராஜாகண்ணுவும் தடுக்க முயன்றதால், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பகுதியில் இருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link