சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடபுரத்தில் பிரசித்தி பெற்ற காளிகோவில் உள்ளது. இங்கு, தினசரி ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், ஆடி வெள்ளி போன்ற விஷேச நாட்களில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இக்கோயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலையின் கீழ் மடப்புரம் காளி ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறது.

இந்த காளி அம்மன் சிலையின் முகத்தில் இரண்டு கல் பதிக்கப்பட்ட 42 கிராமங்களில் ஆன தங்க மூக்குத்திகள் மார்ச் 1 ஆம் தேதி இரவு திருட்டு போயுள்ளன. இரவு நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் தலைமையில் இரண்டு இரவு நேர காவலர்களும் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும்போதே சுவர் ஏறி குதித்து மர்ம நபர்கள் தங்க மூக்குத்திகளை திருடிச் சென்றனர்.

இந்த கோவிலை சுற்றி 21 சிசிடிவி கேமரா இருந்த நிலையில் அதில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை செய்யப்படுகிறது. அந்த சிசிடிவி காட்சியின்படி உள்ளே வரும் இளைஞர், காளி அம்மனிடம் முக்கூத்தி திருடிவிட்டு மீண்டும் அரிவாள் எடுத்து வந்து உண்டியலை சுற்றி வந்து, மீண்டும் வந்த வழியாக கொள்ளையில் ஈடுபட்டு உள்ளே சென்றான்.

உங்கள் நகரத்திலிருந்து(சிவகங்கை)

மேலும் படிக்க : திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமாகா கவுன்சிலர்..!

மூக்குத்தி காணவில்லை என நேற்று(02/03/2023) காலை பூஜையின் போது கண்டறியப்பட்டது திருப்புவனம் போலீசில் செயல் அலுவலர் புகார் கொடுத்துள்ளார். அதில் திருடு போன கல் பதிக்கபட்ட 42 கிராம் மூக்குத்திகளின் மதிப்பு குறிப்பிடப்படவில்லை. கல் வைக்கப்பட்ட தங்க மூக்குத்திகள் என்பதால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு வாய்ந்தவை என கருதப்படுகிறது. நேற்றிலிருந்து அம்மனின் மூக்கில் எதுவும் சேதமடைந்த நிலையில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

திருட்டுச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற மடப்புரம் காளி அம்மனிடம் இருந்து தங்க மூக்குத்தியை திருடி சென்றதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link