திண்டுக்கல் தாலுகா பகுதியில் 6 மணி நேரத்தில் ஒரு துப்பாக்கி சூடு இரண்டு கொலைகள் அடுத்தடுத்து தொடர்ந்த குற்றச்சம்பவங்களால் அதிர்ச்சியில் திண்டுக்கல் மக்கள்.

சின்னத்திரை நடிகர் மீது துப்பாக்கி சூடு:

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் அகஸ்தியபுரம் அருகே காரைக்குடியை சேர்ந்தவர் தனபால். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அந்த நிலத்தை ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா ஆகியோருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் விற்றுள்ளார். சித்தரவு அருகே உள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா சின்னத்திரை நடிகர் ஆவார்.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

ராஜகண்ணு மற்றும் கருப்பையா இருவரும் உறவினர்கள். 5 ஏக்கர் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் அரை ஏக்கர் இல்லாமல் இருந்ததை கண்டு கோபமடைந்தார் கருப்பையா. தொடர்ந்து அந்த அரை ஏக்கர் நிலத்திற்கு பணம் பெறுவதற்கு தனபால் தோட்ட வீட்டிற்கு கருப்பையாவும் ராஜகண்ணும் சென்றுள்ளனர். அங்கு மூவருக்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது தனபால் வீட்டிற்குள் சென்று துப்பாக்கி எடுத்து கருப்பையாவை இடுப்பு மற்றும் காலில் சுட்டுள்ளார். அவர் சுடும்போது ராஜாகண்ணுவும் தடுக்க முயன்றதால், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

பட்டபகலில் பூண்டு வியாபாரி வெட்டி கொலை:

திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வியாபாரத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சின்னதம்பி, தனது வீட்டின் அருகே உள்ள சகோதரர் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பட்டப்பகலில் வீடு புகுந்து சின்ன தம்பியை கொண்டு வந்து ஆயுதத்தால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் சின்ன தம்பி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

பெண்ணின் தலையில் கொலவி கல்லை போட்டு கொலை:

திண்டுக்கல் சுப்புராம் பட்டறை அருகே செல்வமணி (வயது 45) என்பவர் சித்தாள் வேலை செய்து வருகிறார். தனது கணவரான முருகேசன் இறந்து ஒரு வருட காலம் ஆகிறது. இவர்களுக்கு தனபால் என்ற மூத்த மகன் திருமணம் ஆகி கோவையில் மனைவியுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகனான சண்முகசுந்தரம் கல்லூரியில் படித்து வரும் நிலையில், தாய் செல்வமணி மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் வீட்டில் வசித்து வருகின்றனர். வழக்கம்போல் செல்வமணி கட்டிட வேலைக்கு சென்று விட்டார். மகன் கல்லூரிக்கு சென்று விட்டு, மாலை 6.00 மணிக்கு வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். தனது தாய்செல்வமணியின் தலையில் மர்ம நபர் கொலவி கல்லை போட்டு கொன்றுள்ளார். வெள்ளத்தில் இறந்து கிடந்த தாயை யாரோ கொலை செய்ததை அறிந்த மகன் சண்முகசுந்தரம், தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் தாலுகா பகுதிகளில் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்த துப்பாக்கி சூடு சம்பவம், வேடப்பட்டியில் வெள்ளப் பூண்டு வியாபாரி கொலை, பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை என தொடர் குற்றச் சம்பவங்கள் 6 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் திண்டுக்கல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link