உலகளவில் உடற்பருமன் தற்போது பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள வாழ்க்கைமுறை மாற்றங்களால் கார்போஹைட்ரேட், டிரான்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். பி.எம்.ஐ அளவுகோலில் 25 மற்றும் அதற்கும் அதிகமானால் அதனை உடற்பருமன் என்கின்றனர். உடற்பருமானது மெட்டபாலிக் பிரச்னைகள், இதய பிரச்னைகள், நீரிழிவு மற்றும் கான்சர் போன்ற பல்வேறு நோய்களுக்கு பல்வேறு ஆய்வுகள் விளக்கப்படுகின்றன. உடற்பருமனால் ஏற்படும் பிரசனைகள் மற்றும் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 4ஆம் தேதி உலக உடற்பருமன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மோசமான வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் பரம்பரை பிரச்னைகளால் உடற்பருமன் ஏற்படுகிறது. சிலருக்கு மருந்துகளின் பக்கவிளைவாலும் உடற்பருமன் ஏற்படுகிறது. சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உடற்பருமன் வரமால் தடுக்க உதவுகிறது.

1. அதிக புரோட்டீன் டயட்: மேக்ரோ ஊட்டச்சத்துகளான புரதங்கள் நிறைவான உணர்வை தூண்டுவதுடன், மெலிந்த தசைக்கும் இடையூறு ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த டயட்டை பின்பற்றும்போது கொழுப்பை குறைப்பதுடன், நாள்முழுமைக்கும் தேவையான கலோரிகளையும் வழங்குகிறது. ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் என கணக்கு வைத்து சாப்பிடுவது உடற்பருமனுக்கு எதிராக போராடுவதுடன் எடைகுறைப்புக்கும் வழிவகை செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

படம்

2. சர்க்கரை பானங்களை கைவிடுதல்: உடல் எடை மற்றும் மெட்டபாலிக் பிரச்னைகளுடன் அதீத தொடர்புடைய சர்க்கரை பானங்கள். பழ ஜூஸ் அல்லது சோடா அல்லது மிக்சர் அல்லது எனர்ஜி ட்ரிங்க் என எதுவானாலும் நீண்ட நாட்கள் சர்க்கரை பானங்களை எடுத்துக்கொள்வது கட்டாயம் உடற்பருமனுக்கு வழிவகுக்கும். எனவே பானங்களை தவிர்ப்பது நல்லது.

3. உடற்பயிற்சி: எடைகுறைப்புக்கு சிறந்த வழி டயட்டுடன் கூடிய உடற்பயிற்சி. எனவேதான் தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, யோகா போன்ற ஏதேனும் ஒரு வகை பயிற்சியையாவது மேற்கொள்வது அவசியம். எடை கட்டுப்பாடு என்பது உடற்பருமனை எதிர்கொள்ள சிறந்த வழி.

படம்

4. புகைப்பிடித்தல்: உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடற்பருமனுக்கு புகைப்பிடித்தல் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. புகைப்பிடிப்பதால் ஒரு நன்மையும் கிடைப்பதில்லை. மாறாக, கேன்சர், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

5. தூக்கம்: ஒருநாளில் தினசரி 8 மணிநேரம் தூங்குவது மிகமிக அவசியம். தூக்கமின்மை மெட்டபாலிக் பிரச்னைகள், பசி உணர்வுகள், இன்சுலின் பிரச்னை மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். போதுமான ஓய்வின்மையும் உடற்பருமன் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

ஆதாரம்: WWW.PUTHIYATHALAIMURAI.COM



Source link