சுழற்பந்து என்றதும் நம் நினைவிற்கு வருபவர்களில் முக்கியமானவர் ஷேன் வார்னே. ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமாகிய வார்னே ஆஸ்திரேலியாவுக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளையும், சர்வதேச அளவில் 1001 விக்கெட்டுகளையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கோப்பையும் வென்று கொடுத்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நிகழ்ந்த வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் ட்விட்டரில் உருக்கமான பதிவில் பதிவிட்டுள்ளார்.



Source link