மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகிறது. தொடக்க போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நெட்வொர்க் 18 நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மொபைல் போனில் இந்த கிரிக்கெட் தொடரை இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, மகளிருக்கான 20 ஓவர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு முதல் ஆரம்பமாகிறது. இதையொட்டி கடந்த மாதம் வீராங்கனைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டது. இந்நிலையில் முதல் போட்டியாக குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இரவு 7.30-க்கு டாஸ் போடப்பட்டு ஆட்டம் 8 மணிக்கு ஆரம்பமாகிறது. மும்பை அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் ஆஸ்திரேலிய அணியின் குஜராத் விக்கெட் கீப்பர் பெத் மூனி பொறுப்பில் உள்ளார். குஜராத் அணியில் இந்தியாவின் ஹர்லீன் தியோல், ஹர்லி கலா, அஷ்வனி குமாரி, தயாளன் ஹேமலதா, ஸ்னே ராணா, மோனிகா படேல் உள்ளிட்ட வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பேட்டர் சோபியா டங்லீ, வெஸ்ட் இண்டீசின் டியான்ரா டோட்டின், ஆஸ்திரேலியின் ஆஷ்லோ கார்டனர், கிம் கார்ட், அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வாரேம் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பது கூடுதல் பலம்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மும்பை அணியையும் வழி நடத்தியுள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹீதர் கிரஹாம், நெட் சிவர்ப்ரூன்ட், ஹேலி மேத்யூஸ், பூஜா வஸ்த்ராகர், யஸ்திகா பாட்டியா, இஸி வோங் ஆகிய நட்சத்திர ஆட்டக்காரர்கள் அணியில் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. மகளிர் ஐபிஎல் தொடரில் மொத்தம் 20 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதிப்போட்டி மார்ச் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: