திருப்பூரில் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் சஞ்சீவ் குமார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் திருப்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சஞ்சீவ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இதனிடையே, ரயில்வே காவல் நிலையம் முன்பு குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சஞ்சீவ் குமாரின் செல்போன் உள்ளிட்டவற்றை காணவில்லை எனவும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் குற்றஞ்சாட்டினார். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க; 13 அழகிகளுடன் உல்லாச நடனம்… நடுக்கடலில் சொகுசு வாழ்க்கை! – பலே கொள்ளையன் இம்ரான் சிக்கியது எப்படி?
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
வடமாநிலத் தொழிலாளியின் மரண விவகாரத்தில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா கேட்டுக் கொண்டார். திருப்பூரில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விஷமத்தனமான செய்திகள் பரப்பப்பட்டுவருவதாக கூறினார். தவறான உள்நோக்கத்தோடு விஷம பிரச்சாரத்தை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
இதனிடையே, வடமாநிலத்தவர்கள் தாக்குவது தொடர்பான வீடியோவை கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள், ரயிலில் முண்டியடித்து மூட்டை முடிச்சுகளுடன் தங்களது சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில், 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் வடமாநில தொழிலாளிகள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: