சேலம் எருமபாளையத்தில் நடந்த திருமண விழாவில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேற்று கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சிலர் வதந்தி பரப்பியதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வதந்தியை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வதந்தியால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும். அந்த காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதன் பின்னர் கடந்த ஒன்றை ஆண்டு காலமாக மீண்டும் தொழிற்சாலைகள் நல்லவிதமாக இயங்கி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த புரளியால் மீண்டும் அதுபோன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என கூறினார்.

இதையும் படிங்க; சரும நோய்களுக்கு பயன்படுத்தக் கூடிய மருந்துகள் மதுவுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்தலாம் – ஆய்வில் தகவல்.!

புரளி பரப்பியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)

தமிழக அரசு பல லட்சம் கோடி மதிப்பிலான தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும். இந்த நேரத்தில் புரளி பரவுகிறது. தமிழகத்தில் தற்போது 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வெளி மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போய்விட்டால் சிலர் தொழிற்சாலைகள் முடங்கிவிடும் இன்று தமிழர்களுக்கு, தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர் . இது தவறு. நம் இளைஞர்கள் பலர் படித்து நல்ல வேலைக்கு சென்று வல்லுனராக உள்ளனர். நமது இளைஞர்கள் ஒயிட் காலர் ஜாப்பிற்கு சென்றுவிட்டனர். இதனால் மற்ற வேலைகளுக்கு வர கூச்சப்படுகின்றனர். இதனால் தான் வடநாட்டினர் அந்த வேலைக்கு வந்து திறம்பட பணியாற்றி வருகின்றனர். ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வடநாட்டினர் வேலை பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தான் பாஜக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி மற்றும் மேலும் சிலர் வதந்தியை பரப்பி உள்ளனர்.

இவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்தது.

பாஜக நிர்வாகி தான் வதந்தி பரப்ப முக்கிய காரணம்.

இவர் இது போன்று பலமுறை வதந்திகளை பரப்பியுள்ளார்.

நம் தமிழர்கள் மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கில் வசிக்கிறார்கள் . குறிப்பாக பெங்களூரில் பலர் வசிக்கின்றனர். இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பிரச்னையால் தொழில் வர்த்தகம் பாதிக்கப்படும். வன்முறை தூண்டி விட வாய்ப்புள்ளது.

அதானி பிரச்னை ஏற்பட்டபோது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் இறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் இரண்டு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட சம்பவம் ஆகும். ஆனால் இதை வேண்டும் என்றே பொய்யாக பரப்பினர் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முழு நாள் வேலை தருவதில்லை . 20 நாளோ அல்லது 30 நாளோ வேலை வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு உரிய நிதியை ஒதுக்குவது இல்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பேசினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link