பைக் வாங்க ஆச்சரிய லோன் வாங்கிய காலம் போய் இனி பெட்ரோல் போட லோன் வாங்கினாலும் வாகன ஓட்டிகள் நொந்து கொண்டிருக்கும் போது, வாகன ஓட்டிகளை காக்க வந்த விடிவெள்ளியாய் மார்க்கெட்டில் இறங்கியுள்ளது இ-பைக்.
ஐ-பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள ஆம்பியர் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேக்னஸ் இஎக்ஸ் என்ற ஐ-பைக்கை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இது பற்றி விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே அருண் இ பைக் ஷோ ரூமில் கேட்டபோது அவர்கள் நமக்கு பைக் பற்றி விளக்கினர்.
சிறப்பம்சம்:
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
வழக்கமாக இ-பைக்குகள் சத்தமின்றி இயங்கக் கூடியவை. கார் போல சாவி போட்டவுடன் ஆன் ஆகிவிடும், சத்தம் கேட்காது. பழக்கத்தில் விளையாட்டு தனமாக சாவியை போட்டு விட்டு வண்டியை முறுக்கினால், வண்டி நகர்ந்து விபத்து வெடித்தது. அதைத் தவிர்க்க தற்போது பெட்ரோல் பைக்குகள் போல செல்ப் ஸ்டார்ட் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நாம் வண்டியை சிரமப்பட்டு பின்னோக்கி தள்ளுவதற்கு பதில் ரிவர்ஸ் மூட் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் எளிமையாக வண்டியை பின்னோக்கி நகர்த்தலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாகனத்தில் ஆட்டோ சென்சார் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் வாகனத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக நின்றுவிடும்படி செட் தேர்வு. இதே போன்று வேகம் போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆம்பியர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை ஓடும் என்று கூறப்படும் நிலையில், பேட்டரியை தனியாக எடுத்து சார்ஜ் செய்யும் வசதியும் இருந்தால் அடுக்குமாடி குடியிருப்போர் வண்டியை எங்கு வைத்து சார்ஜ் செய்வது என கவலை பட தேவையில்லை.
இதுபோக எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அரசின் மானியமாக 34,500 ரூபாய் கிடைக்கிறது. அதே போல் பேட்டரியை மட்டும் சரிவர பராமரித்து வந்தாலே நீண்ட நாள் உழைக்கும் என்று கூறப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: