தருமபுரி அருகே அரசு பள்ளி வகுப்பறையை சூறையாடிய மாணவ, மாணவிகளை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வகுப்பறையை சேதப்படுத்தியுள்ளனர். மாணவ, மாணவர்கள் அமர் பயன்படுத்தும் மேஜை, டேபிள் போன்றவற்றை கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாணவர்களுடன் சேர்ந்து மாணவிகளும் வகுப்பறையை சேதப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு முடிந்து இன்று சில தினங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வி முடிந்ததைக் கொண்டாடும் வகையில் வகுப்பறையில் உள்ள மேஜை நாற்காலிகளை உடைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அநாகரிகமான செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள். பள்ளி உடைத்ததால் அடுத்த கல்வி ஆண்டு வரும் மாணவர்களுக்கு அமர வகுப்பு இல்லாததால் அவர்கள் தரையில் அமரும் சூழ்நிலை ஏற்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(தர்மபுரி)

இப்பள்ளியில் ஏற்கனவே இது போன்று இரண்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்றும் மாவட்ட நிர்வாகமும் பள்ளி கல்வித்துறையும் முறையான நடவடிக்கை எடுக்காததால் மூன்றாவது முறையாக சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தளவாட பொருட்களை சேதப்படுத்திய மாணவ, மாணவிகளை 5 நாள் சத்திரசிகிச்சை செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

செய்தியாளர்: சுகுமார், தருமபுரி.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link