தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நம்மை சீண்டி பார்க்கிறார். சனானதனம் பற்றி பேசுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும்  ஆன்லைன் தடைசட்டத்தினை எதிர்க்கிறது. ஆகையால் தான் ஆளுநருக்கு வாய் இருக்கிறது, காது கேட்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் .

ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இதயம் அனுமதிக்கிறதா? ஆளுநருக்கு இதயத்திற்கு பதில் களிமண் இருக்கிறதா? பலர் ஆன்லைன் ரம்மியால் பணத்தினை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்னர். இதனை தடுக்க சட்டம் இயற்றினால் அனுமதி தர ஆளுநர் மறுக்கிறார்.

உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)

தூத்துக்குடி

தூத்துக்குடி

பாஜக தமிழக அரசியலை வேறு விதமாக  நடத்த பார்க்கிறது. திமுக ஆட்சியை ஏதாவது செய்யலாம் என்று பார்க்கின்றனர். ஏப்ரல் 14ம் தேதி தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணமாலை கூறுகிறார். மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன், அவர் காவல்துறை பதவியில் இருந்த போது புரிந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன்” என்றார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link