விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டியில் திருமண தடை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது. பாண்டியர்களின் கட்டிட கலையை ஒத்துள்ள இந்த கோவிலில் நாயக்க மன்னர் ஒருவரின் சிலையும் காணப்படுகிறது. மேலும் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மன் இங்கு வந்து வழிபட்டு சென்றதாக கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு:
மொத்தமாக இரண்டு பகுதிகளை கொண்ட இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மூலவராக மீனாட்சியும், சுந்தரேஷ்வரரும் உள்ளனர். பொதுவாக மீனாட்சி அம்மன் கையில் கிளி வைத்திருப்பது தான் வழக்கம். ஆனால் இங்குள்ள மீனாட்சி அம்மன் கையில் தாமரை வைத்திருப்பது கூடுதல் சிறப்பு என கூறப்படுகிறது. இவை தவிர கோவிலை சுற்றியுள்ள கல் மண்டபத்தில் ராமர், சீதா, சிற்பம் மற்றும் முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் போன்றோருக்கு சந்நிதிகள் காணப்படுகின்றன.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
தலை திரும்பிய நந்தி:
வழக்கமான சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு முன்பிருக்கும் நந்தியின் சிலை சிவனை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள நந்தி சிவனை பார்க்காமல் வேறு திசையில் சற்று திரும்பியபடி இருக்கிறது. இந்த நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
வரலாறு:
சிறப்புமிக்க கற்றளி அமைப்பு கொண்ட இந்த கோவிலின் வரலாறு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எட்டயபுரத்தை ஆட்சி செய்த கண்டப்ப நாயக்கர் எனும் நாயக்க மன்னர் தோஷம் தீர்க்க கோவில் கோவிலாக சென்ற போது, சிவனுக்கு வலப்புறம் அம்மன் இருக்கும் ஆலயத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கும் என யாரோ சொல்ல, அவர் இங்கு ஒரு கோவில் கட்டியதாக கூறப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதற்கு சான்றாக இந்த கோவிலில் கண்டப்ப நாயக்கரின் சிலை உள்ளது. அதே சமயம் மீனாட்சி அம்மன் சந்நிதி முன்பு உள்ள கல்மண்டபத்தின் மேற்பகுதியில் மீன் சின்னத்தை வைத்து இது பாண்டியர் காலத்தை சேர்ந்த கோவிலாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த கோவில் பழமையான கோவில் என்றுமட்டும் அனுமானிக்க முடிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: