ஈரோடு மாநகரில் ஒரே பொழுது போக்கு மையமாக உள்ள வ.உ.சி பூங்காவிற்கு ஏராளமான காதலர்களும், பொதுமக்களும் வருவது வழக்கம். காதலிக்கும் இளம் ஜோடிகள் பூங்காவில் கட்டணம் செலுத்தி விட்டு உள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பர்.

வழக்கம் போல் நேற்று காதலர்கள், நண்பர்கள் என பலரும் பூங்காவில் இருந்தபோது அதிரடியாக நுழைந்த ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார், காதலர்களை குற்றவாளிகள் போல் மிரட்டி அனைவரையும் ஒரே இடத்தில் நிற்க வைத்து விசாரணை நடத்தினர்.

Read More : நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியது… 3 பேர் பரிதாப பலி… திருச்சியில் பயங்கரம்..!

உங்கள் நகரத்திலிருந்து(ஈரோடு)

அவர்களின் முகவரி, செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டதுடன், காதலிப்பதை பெற்றோருக்கு தெரிவிக்க போவதாக மிரட்டினர். இதனால் செய்வதறியாது திகைத்த இளம்பெண்கள் கண்ணீர் விட்டனர். கட்டணம் செலுத்தி விட்டு பூங்காவிற்கு சென்ற காதல் ஜோடிகள் குற்றவாளிகளை போல் கூனிக்குறுகி வெளியேறினர். இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது, ​​காதலர்கள் பூங்காவில் அமர்ந்து அத்துமீறுவதாக வந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், இதனை கண்காணிக்க பூங்காவில் மாநகராட்சி காவலர்கள் உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. இதையும் மீறி தவறு நடப்பதாக கூறி போலீசார் காதலர்களை குற்றவாளிகளை போல் நடத்தி வெளியேற்றியது மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து உயர் அதிகாரிகளிடமும், மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்க இருப்பதாகவும் கூறினர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link