காரைக்குடியில் போலீஸ் வேடமணிந்து வந்து நகைக்கடை இடைத்தரகரை கடத்தி சென்று இரண்டரை கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கத்தை பறித்து சென்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், காரைக்குடியில் உள்ள நகை வியாபாரிகளின் இடைத்தரகர் ஒருவர் வருகிறார். இவர், நகை வியாபாரிகளிடம் பணம் பெற்று சென்னையில் இருந்து நகை வாங்கி வந்து கமிஷன் பெற்று வந்துள்ளார்.
அந்த வகையில் நகையுடன் ஆம்னி பேருந்தில் வந்த ரவிச்சந்திரன் இன்று காலை 4.30 மணியளவில் கழனிவாசல் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது, போலீசார் போல் வேடம் அணிந்து வந்த 4 பேர், அவரை காரில் கடத்தி சென்று இரண்டரை கோடி பணம் மற்றும் ஒன்றரை கிலோ நகைகளை பறித்துக்கொண்டு புதுக்கோட்டை சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு சென்றனர். இது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணை நடக்கிறது.
உங்கள் நகரத்திலிருந்து(சிவகங்கை)
செய்தியாளர்: முத்துராமலிங்கம் துரைராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: