திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நேற்று (மார்ச் 12ம் தேதி) துவங்கியது. கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அம்மனுக்கு கூடையாக பூக்களை சாத்தினர்.

தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற விழா பூச்சொரிதல் விழா ஆகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.

மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மையும், தன்னை தரிசிக்க வரும் எல்லாவிதமான நோய்களும் தீவினைகளும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மன் பக்தர்களுக்கு 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனியாக கடைசி ஞாயிறு வரை தனிச்சிறப்பு ஆகும்.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

இதையும் படிங்க : நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியது… 3 பேர் பரிதாப பலி… திருச்சியில் பயங்கரம்..!

இந்நிலையில், நிகழாண்டில் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு கட்டு கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் யானை மீது பூக்களை கொண்டு வந்த கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்கடைகளில் தலை சுமந்தும், கையில் ஏந்தி வந்து அம்மனுக்கு சாத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வாகனங்களில் இருந்து அம்மனுக்கு இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை வரவுள்ளனர். இந்த பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது என கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link