சிவகங்கை அருகே தண்ணீர் தேடி வந்த 4 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை பகுதி ரயில் தண்டவாளத்தில் இன்று காலை காட்டுப் பகுதியில் 4 பேர் தண்ணீர் குடிப்பதற்காக ஊருக்குள் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது மதுரையில் இருந்து மண்டபம் சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 பேர் அடிபட்டு உயிரிழந்தனர்.

இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றஅவர்கள் இறந்த மான்களின் சடலத்தை கைபற்றி கொண்டு சென்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(சிவகங்கை)

இது குறித்து பேசிய கிராம மக்கள், வனத்துறை சார்பில் காட்டுப் பகுதிகளில் ஆங்காங்கே தொட்டி கட்டி தண்ணீர் வைப்பது வழக்கம். தற்போது வைக்கப்படாததால் காட்டை விட்டு வெளியேறி ஊர்க்குள் வந்து வனவிலங்குகள் உயிரிழப்பது தொடர்கதை ஆகியுள்ளது. உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: சிதம்பரநாதன், சிவகங்கை.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link