தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான போலி வீடியோக்கள் வெளியாகின. இதனால் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க தமிழ்நாடு அரசு பல நடவடிக்கை எடுத்தது.

இதனிடையே, புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் தற்போது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ்குமார் என்பவரை கைது செய்திருந்தனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)

திருப்பூர்

திருப்பூர்

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் குமார் (24) ரயில்வேயில் பார்டராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கில் வேறு மாநிலங்களில் நடந்த தாக்குதல் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டுள்ளது தெரியவந்தது.

இதையும் படிங்க : 90% நிலத்தை கையகப்படுத்திய பின்னரே பாலம் மற்றும் சாலைப் பணிகள் தொடக்கம்.. அமைச்சர் எ.வ.வேலு

இதையடுத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பிரசாந்த் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் ஜார்க்கண்ட் சென்று அவரை கைது செய்தனர். மேலும், தற்போது அவரை திருப்பூர் அழைத்து வரும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளனர். திருப்பூர் வந்தவுடன் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link