90 சதவீத நிலத்தை கையகப்படுத்திய பின்னர் தான் பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணியை செய்து வருகிறோம் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கண்ணாடிகுப்பம் பகுதியில் ரூ.25 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால கட்டுமான பணியை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கர்னாடிகுப்பம் ரயில்வே மேம்பால பணியை அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் வாணியம்பாடி நியூடவுன் மேம்பாலத்திற்கு முதலில் நிலத்தை கையகப்படுத்திய பின்னர் தான் மேம்பாலம் கட்டும் பணியை துவக்க உள்ளோம் என்றும் கடந்த ஆட்சியை போல் இல்லாமல், முதலில் 90 சதவீத நிலத்தை கையகப்படுத்திய பின்னர் தான் பாலம் மற்றும் சாலையை அமைத்துள்ளோம் என்றார்.
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பத்தூர்)
மேலும் ஆம்பூர் – வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க விரைவில் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம், மேலும் ஐந்து துறைகள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர்: எம்.வெங்கடேசன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: