ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கட்டணமின்றி ரசிகர்களுக்கு வழங்கவுள்ள ஜியோ சினிமாவின் விளம்பர தூதராக டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. டாடா ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை ஜியோ சினிமா நிறுவனம் பெற்றுள்ளது. இதனுடன் இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரராக திகழும் சூர்ய குமார் யாதவ் விளம்பர தூதராக இணைந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சூர்ய குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஜியோ சினிமாவின் டாடா ஐபிஎல் ஒளிபரப்பை ரசிகர்கள் மத்தியில் கூடுதலாக கொண்டு சேர்ப்பார்.

ஜியோ சினிமாவின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டது குறித்து சூர்ய குமார் யாதவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜியோ சினிமா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஜியோ சினிமா வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தை உலகத்தரமான சேவை வழங்குகிறது. தொடர்ந்து தரத்தில் சமரசம் இல்லாமல் சேவையாற்றி வரும் ஜியோ சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனத்துடன் பணியாற்றுவதை நான் எதிர்பார்த்துள்ளேன். என்று கூறியுள்ளார். வயாகாம் 18 நிறுவனத்தின் செயல் அதிகாரி அனில் ஜெயராஜ் தலைமை கூறினார், ‘உலகத் தரம் வாய்ந்த புதுமைகள், இணையில்லாத சேவை, ரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்கை அளித்தேன் என எங்கள் நிறுவனத்தின் தரத்தை சூர்ய குமார் யாதவ் பிரதிபலிக்கிறார். சூர்ய குமாரின் 360 டிகிரி ஆட்டத்தைப் போன்று ஜியோ சினிமா நிறுவனம், இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்’ என்று தெரிவித்தார்.

டாடா ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இந்த போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. டாடா ஐபிஎல்லின் அனைத்து போட்டிகளையும் எந்த கட்டணமும் இன்றி ஜியோ சினிமாவில் 4K தொழில்நுட்பத்தில் பிராந்திய மொழிகளில் கண்டு ரசிக்கலாம். ஜியோ சினிமா இப்போது ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது. தற்போது மகளிர் ஐபிஎல் தொடரை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஆப்பை ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் தளங்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். லேட்டஸ்ட் அப்டேட்டை தெரிந்து கொள்ளுங்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களை பின் தொடருங்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link