திண்டுக்கல்லில் வியாபாரிகள் வருகையின் காரணமாக அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் வெறுச்சோடியுள்ளது. சென்ற மாதம் வரை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ இந்த மாதம் 300 ரூபாய்க்கு கூட விற்பனையாகாத நிலையில் 5 டன் பூக்கள் தேக்கத்தால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வணிக பூ மார்க்கெட் நகரின் மத்தியில் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கலை சுற்றியுள்ள நரசிங்கபுரம், வெள்ளோடு, சின்னாளப்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, நிலக்கோட்டை, பெரியகோட்டை, அம்பாத்துறை, அம்மைய நாயக்கனூர், சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் பூ தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விற்கக்கூடிய பூக்களை திண்டுக்கல் அண்ணா வணிக வளாகப் பூ மார்க்கெட் விற்பனைக்கு வருவது வழக்கம். இங்கு வரக்கூடிய பூக்களை வாங்குவதற்காக திருச்சி, சென்னை, கோவை, தாராபுரம், சீர்காழி, சிதம்பரம் மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்து செல்வர். சென்ற மாதம் வரை தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்து வந்த நிலையில் தொடர் முகூர்த்தங்கள் காரணமாக பூக்களின் விலை உச்சமடைந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

Read More : ‘இவ்வளவு நேர்மையா…’ திருடிய சேலைகளைத் திருப்பித் தந்த திருட்டு கும்பல்… கடை உரிமையாளர் செய்த அந்த காரியம்..!

தற்பொழுது இந்த மாதத்தில் எந்த விசேஷ வைபோகங்கள் இல்லாத காரணத்தாலும் தேய்பிறை அஷ்டமி நவமி என்பதாலும் மாதம் வரை இரண்டு, மூன்று டன் பூக்கள் வருகை தந்த இடத்தில் தற்போது பூக்கள் வரத்து அதிகரித்து இரட்டிப்பு அளவிற்கு 5 டன் 6 டன் பூக்கள் வருகை தந்துள்ளது. ஆனால் பூக்களை வாங்க ஆள் இல்லாமல் 24 மணி நேரமும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் இந்த பூ மார்க்கெட் இப்போது விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பூக்களின் தேவையின்மை காரணமாக பூ மார்க்கெட்டில் விவசாயிகள் மட்டும் உள்ளோம். பொதுமக்களும் வியாபாரிகளும் வருகை தராததால் சென்ற மாத இறுதி வரை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ 300 ரூபாய்க்கு 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ காகரட்டாண் பூ 150 ரூபாய்க்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ ஜாதிப்பூ 200 ரூபாய்க்கு 100 ரூபாய்க்கு 100 ரூபாய்க்கு 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சம்ங்கி பூ 30 ரூபாய்க்கு 800 விற்பனையான ஒரு கிலோ கனகாம்பரம் 100 ரூபாய் மற்றும் அனைத்து பூக்களின் விலையும் வீழ்ச்சி அடைந்து விற்பனையாகாமல் சுமார் 4டன் முதல் 5 டன் பூக்கள் பூ மார்க்கெட்டிலேயே தேக்கம் அடைந்து உள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link